சுல்தானாவின் கனவு

$ 6.95

நாளைய உலகு பற்றிய அழகிய பெண்ணிய கனவு

Only 2 left in stock

Description

ரொக்கையா சக்காவத் ஹூசைன், துர்கா பாய்

ரொக்கையா சக்காவத் ஹூசைன் என்ற வங்க மொழி எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய முதல் புதினம் தான் (குறுநாவல்) சுல்தானாவின் கனவு. 1905இல் மெட்ராஸ் ரெவ்யூ என்ற இதழில் இது வெளியானது. போரும் வன்மமும் ஆணதிகாரமும் இல்லாத ஒரு இலட்சிய உலகை முன்நிறுத்தும் இது போன்ற கதைகளை அன்று உலகளவில் பெண்விடுதலை சிந்தனையுடைய பலர் எழுதி வந்தனர். இவ்வாறு எழுதியவர்களில் ரொக்கையா முதன்மையானவராக இருந்தார். கூட்டுறவு சமுதாயத்தில் நம்பிக்கை, சுற்றுசூழலைப் பற்றிய ஆழ்ந்த புரிதல், அறிவியல்பார்வை, இயற்கையை நேசித்தல், பேச்சும் விவாதமும் கொண்டு பிரச்சனைகளை அணுகுதல், போர் என்பதை முற்றிலும் தவிர்த்து அமைதிவழியை பின்பற்றுதல் என்பனவற்றை உள்ளடக்கிய வித்தியாசமான, புரட்சிகர சிந்தனையை ரொக்கையா வளர்க்க முனைந்தார். இந்திய துணைக்கண்டத்தின் பெண்விடுதலை மரபின் முக்கிய பிரதிநிதியாக இன்றளவும் அவர் திகழ்கிறார்.
கோண்ட் என்ற ஆதிவாசி சமுதாயத்தைச் சேர்ந்த துர்கா பாய் என்ற ஓவியரின் படங்களுடன் இந்தப் பதிப்பு வெளி வருகிறது. ரொக்கையா ஹூசைனின் கற்பனைக்கு ஈடுகொடுக்கும் வகையில் துர்கா மிக எளிமையாகவும், அற்புதமாகவும் இலட்சிய ‘பெண்ணுலகு’க்கு வடிவம் தந்துள்ளார்.

Additional information

Weight 240 g
Dimensions 240 × 170 mm
ISBN

Pages

Printing

Binding

HSN Code

49030010

You may also like…